சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல், வரும், 16ம் தேதி நடக்கும் என, இந்திய

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல், வரும், 16ம் தேதி நடக்கும் என, இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், தி.மு.க.,விற்கு நான்கு, அ.தி.மு.க.,விற்கு இரண்டு ராஜ்யசபா எம்.பி.,க் கள் பதவி கிடைப்பது உறுதியானது. தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.

தி.மு.க.,வில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்; தே.மு.தி.க., சார்பில் சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அ.தி.மு.க., சார்பில் தம்பிதுரை, அக்கூட்டணியில் உள்ள பா.ம.க., சார்பில் அன்புமணி மனு தாக்கல் செய்தனர். அவர்கள் மனு ஏற்கப்பட்டு, மற்றவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மனுவை திரும்ப பெற, இன்று மாலை 3:00 மணி வரை, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆறு பேர் தவிர, மற்றவர்கள் யாரும் களத்தில் இல்லாததால், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது.

Source link