சென்னை: தமிழகத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்த இடமாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாசம், லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த கூடுதல் டிஜிபி ஜெயராம், ஊர்க்காவல் படை மற்றும் சிவில் டிபென்ஸ் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவடி கூடுதல் கமிஷனரான ஐஜி பவானீஸ்வரி, சென்னை தலைமையிட ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரயில்வே ஐஜியான பாபு, போலீஸ் நவீனமயமாக்குதல் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆயுதப்படை பிரிவு டிஐஜி விஜயலட்சுமி, திருச்சி ஆயுதப்படை பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை டிஐஜி சசிமோகன், திண்டுக்கல் சரக டிஐஜியாகவும், திண்டுக்கல் டிஐஜி சாமிநாதன், கோவை டிஐஜியாகவும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை கமிஷனர்/டிஐஜியான மணிவண்ணன், ராமநாதபுரம் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் பணியாற்றிய டிஐஜி தேஷ்முக் சேகர் சஞ்சய், நெல்லை கமிஷனர்/டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக இருந்த ஜெயந்தி, தாம்பரம் இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் இணை கமிஷனர் ஜெயலட்சுமி, சென்னை தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.டிஎன்பிஎல் தலைமை விஜிலன்ஸ் அதிகாரியான டிஐஜி சிபி சக்ரவர்த்தி, திருச்சி சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை சைபர் கிரைம் டிவிசன் எஸ்பி ஆதர்ஷ் பச்சேரா, திருச்சி ரயில்வே எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி ரயில்வே எஸ்.பி., ராஜன், சென்னை ரயில்வே எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.திருச்சி தலைமையிட துணை கமிஷனர் சியாமளா தேவி, சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மத்திய புலனாய்வு பிரிவு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை மதுவிலக்கு மத்திய புலனாய்வு பிரிவு எஸ்.பி., சாம்சன், மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.மதுரை மாநகர தலைமையிட துணை கமிஷனர் ராஜேஸ்வரி, கோவை தலைமையிட துணை கமிஷனராகவும், கோவை தலைமையிட துணை கமிஷனர் திவ்யா, மதுரை தலைமையிட துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.செங்கல்பட்டு எஸ்.பி., சிபின், ராணிப்பேட்டை எஸ்.பி.,யாகவும், ராணிப்பேட்டை எஸ்.பி., அய்மன் ஜமால், செங்கல்பட்டு எஸ்.பி.,யாகவும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
