சென்னை; தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி இன்று தொடங்கி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக நடக்க இருக்கிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளனர். ஓட்டுப்பதிவுக்கான நட்கள் வெகு குறைவாக உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர ஓட்டுவேட்டையில் உள்ளனர்.
அதே நேரத்தில் ஓட்டுச்சாவடியில் வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் தேர்தல் கமிஷன் முன்னெடுத்துள்ளது. புதியதாக பெயர் சேர்த்த வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தேர்த்ல் கமிஷன் வழங்கி உள்ளது.
இந் நிலையில், தமிழகம் முழுவதும் பூத் ஸ்லிப் எனப்படும் வாக்காளர் தகவல் சீட் வினியோகம் வீடு, வீடாக இன்று தொடங்கி உள்ளது. இந்த ஸ்லிப்பில், வரிசை எண் மற்றும் பாகம் எண் ஆகியவை வழக்கத்தை விட பெரியதாக அனைவரும் எளிதில் தெரிந்து கொள்ளும் அச்சிடப்பட்டு உள்ளது.
அதனுடன், கியூ ஆர் குறியீடும் குறிக்கப்பட்டு உள்ளது. ஏப்.17க்குள் தகுதிவாய்ந்த அனைத்து வாக்காளர்களுக்கு இந்த பூத் ஸ்லிப் வினியோகிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.
வாக்காளர்களுக்கு வழங்கப்படும் இந்த பூத் ஸ்லிப் பயன்படுத்தி, தேர்தலில் ஓட்டு போட முடியாது. வாக்காளர் அடையாள அட்டை அதற்கு மாற்றாக ஆதார் உள்ளிட்ட 12 ஆணவங்களை பயன்படுத்தலாம்.
