சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. அவற்றில் இடம்பெற

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. அவற்றில் இடம்பெற தவறிய மற்றும் இடம் பெற வேண்டிய வாக்குறுதிகள் அடங்கிய தலித் பெண்கள் உரிமை மற்றும் பொருளாதார இறையாண்மை குறித்த அறிக்கையை, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி வெளியிட்டுள்ளார்.

அதன் விபரம்:

* ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து பஞ்சமி நிலங்களையும் மீட்க, 100 நாட்களுக்குள், உயர் அதிகார நில மீட்பு ஆணையம் அமைக்கப்பட்டு, நிலமற்ற தலித் பெண்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்

* வீடற்ற தலித் பெண்களுக்கு தனித் தனியாக அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது கான்கிரீட் வீடுகள் கட்டித் தர முன்னுரிமை வழங்கப்படும்

* தலித் பெண்களுக்கு மட்டுமே, அயோத்திதாசர் பெண்கள் வங்கி உருவாக்கப்பட்டு, பிணையில்லா கடன், சிறுதொழில் துவக்க பூஜ்ஜிய வட்டி கடன் வழங்கப்படும்

* ‘சிப்காட், சிட்கோ’ போன்ற அரசு தொழிற்போட்டை நில ஒதுக்கீட்டில், தலித் பெண்களுக்கு, 25 சதவீத முன்னுரிமை வழங்கப்படும்

* தலித் பெண்கள் துவங்கும் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க நிறுவனங்களுக்கு, 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும்

* தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தலைமையில், மாவட்டம்தோறும் ‘தலித் பெண்கள் பாதுகாப்புப் பிரிவு’ உருவாக்கப்படும்

* எஸ்.சி., – எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளை அதிகபட்சம், ஆறு மாதங்களுக்குள் முடிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் கட்டாயமாக்கப்படும்

* செயற்கை நுண்ணறிவு எனும் ‘ஏ.ஐ., கோடிங் மற்றும் டேட்டா சயின்ஸ்’ பயிற்சிகளைப் பெற, தலித் மாணவியருக்கு இலவச ‘டிஜிட்டல் வவுச்சர்’ எனும் கூப்பன்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link