சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காமல் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி, மகளிர் காங்கிரஸ்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காமல் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி, மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரை நீக்கி விட்டதாக காங்., தலைமை அறிவித்துள்ளது.

விமர்சனம்

காங்கிரசின் மகளிர் பிரிவின் தேசிய செயலாளராக பதவி வகித்து வந்த ஹசினா சையத் கடந்த 2024 ம் ஆண்டு தமிழக காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.அவர், சட்டசபை தேர்தலில் , தனக்கும், மகளிருக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். அப்போது, காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழக காங்கிரசின் மேலிட பொறுப்பளரான கிரிஷ் சோடங்கரை விமர்சித்து பேசினார்.

அவர் பேசியதாவது: முகமது ஜமால் யூனுஸ் என்ற பெயரே தெரியாத நபர், தஞ்சாவூரை சேர்ந்தவர். மயிலாடுதுறையை சேர்ந்தவர் அல்ல. அவரது பெயரை கொண்டு வந்துள்ளனர். ஐஓசி தலைவராக இருக்கும் சாம் பிட்ரோடா உடன் வேலை செய்யும் புஷ்பராஜ் மூலம் காங்கிரஸ் தலைவரிடம் பேசி, மாநில தலைவர் இரவோடு இரவாக எனக்கான வாய்ப்பை கடத்தி உள்ளார்.

நான் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர். 33 சதவீத இட ஒதுக்கீடு என்கின்றீர்கள். காங்கிரஸ் மேலிடம் உறுதி செய்த சீட்டை, ஸ்ரீவல்ல பிரசாதா, மயிலாடுதுறை எம்.பி., சுதா பேச்சை கேட்டு தலைமை கொடுத்த சீட்டை பறித்தீர்கள் என்றால் எப்படி?

காலையில் 11 மணிக்கு தெரியும் போது கடுமையாக சண்டை போட்டேன். அனைவரும் அசாம், கேரளா பிரசாரத்துக்கு சென்று விடுவதால் யாரையும் பிடிக்க முடியவில்லை.கடுமையான சண்டை, கடும் கோபத்தோடு மகளிருக்கு சீட் கொடுக்கவில்லை. மேற்கு வங்கத்தில் மகளிர் காங்கிரஸ் தலைவர் உட்பட 41 பேருக்கு இடம் கொடுத்துள்ளீர்கள்.கேரளாவில் மகளிர் காங்கிரசை சேர்ந்த 9 பேருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள். அம்மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் ராஜ்யசபா எம்பி ஆக உள்ளார்.

அசாமில் 5 பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள். அம்மாநில மகளிர் காங்கிரசுக்கு பதவி கொடுத்துள்ளீர்கள். புதுச்சேரியிலும் தமிழகத்திலும் மட்டும் கொடுக்கவில்லை. எனது நிர்வாகிகளுக்கும் கொடுக்கவில்லை.

பரிசீலனையில்லை

சிங்காநல்லூரில் தகுதி வாய்ந்த வேட்பாளராக, மகளிர் காங்கிரஸ் துணைத்தலைவர் ஷோபனா செல்வம் உள்ளார். அவரது தாத்தா ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தில் பெரிய தலைவராக இருந்தார். பலமுறை எம்எல்ஏ ஆகவும் இருந்துள்ளார். அவரது பெயரை பரிசீலனை செய்யவில்லை.

குளச்சல் தொகுதியில் சோனி விதுலா என்ற மாவட்ட தலைவர் பெயரை கொடுத்தும் பரிசீலனை செய்யவில்லை. மகளிர் காங்கிரசில் பலர் பெயரை அளித்து இருந்தும் யாரின் பெயரையும் பரிசீலனை செய்யவில்லை என்றால் எப்படி?

33 சதவீத இட ஒதுக்கீடு என்பது காற்றில் செல்கிறதா என்று பலரிடம் விவாதம் செய்துள்ளேன்.கிரிஷ் ஷோடங்கரிடம் பேசினேன். மாநில தலைவரிடம் பேசிய போது, எந்தஇடத்திலும் எனது பெயர் இல்லை எனக்கூறினேன். சரி பார்த்து விட்டு வருகிறேன் என்று சொன்னார். அவ்வளவு தான்

இதில் முழுவதும் என்னை சுற்றி சதி விளையாட்டை நடத்தி உள்ளார்கள். கிரிஷ் ஷோடங்கர், கோவா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த போது , பார்வையாளராக இருந்த செல்லக்குமார் அவரை முதல்வர் வேட்பாளராக பரிந்துரை செய்தார். அதனால் அவரது பெயரை முதலிடத்தில் வைப்பேன் எனக்கூறி, எனது பெயரை 2வது இடத்திற்கு கொண்டு சென்றார் சோடங்கர். அவரை வேட்பாளர் ஆக்க வேண்டும் என்றால், சொந்த ஊரான குளச்சலில் ஏன் ஆக்கியிருக்கக்கூடாது.

என்னுடைய இடத்தில் மட்டும் ஏன் அடம் பிடிக்கிறீர்கள். அதற்காக போராடுகிறேன். இதற்காக இயக்கம் துவங்குகிறேன். புரட்சி பறவைகள், புரட்சி புறாக்கள் என பெயர் துவங்கி என்ன வேண்டுமானாலும் பெயர் வைப்போம்.

போராட்டம்

எங்களது உரிமைக்காக தெருவில் இருந்து பார்லிமென்ட் வரை, தேவைப்பட்டால் பார்லிமென்ட் வெளியே வரை போராடுவோம். கார்கே, பெரிய தலைவர். எவ்வளவு சிறந்த தலைவர், 85 வயதாகிறது. வட்டார தலைவர் பதவியில் இருந்து தேசிய தலைவராக உயர்ந்துள்ளீர்கள். தமிழகத்தில் நடப்பது உங்களுக்கு தெரியாதா? இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஹசீனா சையத் மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, அந்த உத்தரவை மகளிர் காங்கிரசின் அகில இந்திய தலைவர் அல்கா லம்பா பிறப்பித்துள்ளார்.

ராஜினாமா

இதனிடையே, ஹசீனா சையத் தனது பதவியை ராஜினாமா செய்து, ராகுலுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், தனக்கு தேர்தலில் போட்டியிட மேலிடம் வாய்ப்பு வழங்கியும், மற்றவர்கள் அதனைதடுத்து தன்னை அவமானப்படுத்திவிட்டனர். நான் உட்பட தகுதி வாய்ந்த பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மகளிர் காங்கிரசின் தலைவியான எனக்கு அநீதி இழைக்கப்பட்டது போல் உணர்கிறேன். கார்கேயிடம் புகார் அளித்தேன். ஆனாலும், ஆனாலும், மாநில தலைவர் செ ல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலர் ஸ்ரீவல்ல பிரசாத், மயிலாடுதுறை எம்பி சுதா, புஷ்பராஜ், கிரிஷ் சோடங்கர் மற்றும் நிவேதிதா ஆல்வா ஆகியோரின் ஊழல் அமைப்புக்கு ஆதரவாக கார்கே உள்ளதால் எனது கோரிக்கை வீணானது என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Source link