சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், 175 வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், 175 வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.

தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது. கூட்டணியில் ஒன்பது கட்சிகளுக்கு, 66 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில், 59 தொகுதிகளில், கூட்டணி கட்சி வேட்பாளர்கள், தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடுகின்றனர். ம.தி.மு.க., – 3, ம.ம.க., – 2, கொ.ம.தே.க., – 2 என, ஏழு தொகுதிகளில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

சொந்த சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் தவிர்த்து, மீதமுள்ள, 175 தொகுதிகளில், உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். தி.மு.க., மட்டும் எத்தனை தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப் போகிறது என்பது, சிறு கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிய பின் தெரிய வரும்.

கடந்த சட்டசபை தேர்தலில், 182 வேட்பாளர்கள், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். இதில், தி.மு.க., வேட்பாளர்கள் மட்டும், 173 பேர். மற்ற ஒன்பது பேர், இதர கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Image 1553545

Source link