சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக ஏப்.,23ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்.,23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. தொகுதிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பொது மக்கள் ஓட்டளிக்க ஏதுவாக தேர்தல் நடக்கும் ஏப்.,23ம் தேதியை பொது விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
