சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடாததால், நிர்வாகிகளிடம் வாங்கிய விருப்ப மனு கட்டணத்தை மக்கள் நீதி

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடாததால், நிர்வாகிகளிடம் வாங்கிய விருப்ப மனு கட்டணத்தை மக்கள் நீதி மய்யம் திருப்பி கொடுக்க உள்ளது . நாளை முதல் ஏப்.,16 வரை கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில் போட்டியிட கட்சியினரிடம் மக்கள் நீதி மய்யமும் விருப்ப மனுக்களை வழங்கியது. இதற்காக ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்து உரிய கட்டணத்தை செலுத்தினர். ஆனால், தேர்தலில் போட்டியிடாமல் கமல் ஜகா வாங்கிவிட்டார்.

இதனையடுத்து விண்ணப்ப கட்டணத்தை கட்சி நிர்வாகிகள் திரும்ப கேட்டனர்.ஆனால், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளோ, விருப்ப மனுக்கான கட்டணம் கட்சி நிதியாக கருதப்படும். கட்டணத்தை திரும்ப வழங்க முடியாது எனத் தெரிவித்தனர். இது சர்ச்சையை உண்டாக்கியதுடன் கட்சி நிர்வாகிகள் இடையே அதிருப்தியை வெளிப்படுத்தியது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை நிலையச் செயலர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள், தாங்கள் செலுத்திய கட்டணத் தொகையை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை ( ஏப்ரல் 08) முதல் ஏப்.,16க்குள் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

Source link