சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று கூறியதாவது: பெரிய கட்சிகளான தி.மு.க., — அ.தி.மு.க., – பா.ஜ.,

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று கூறியதாவது:

பெரிய கட்சிகளான தி.மு.க., — அ.தி.மு.க., – பா.ஜ., போன்றவற்றால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற மனநிலை, சிறு கட்சிகள் மற்றும் சமூக தலைவர்களிடையே நிலவுகிறது.

சமூக நீதி, சமத்துவம், தமிழர் வாழ்வுரிமையை முன்னிறுத்தி, புதிய அரசியல் மாற்றம் அவசியமாகியுள்ளது.

மேலும், 50-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய அமைப்புகள் அனைத்தும் த.வா.க.,வுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளன.

அனைவரும் இன்று ஒன்று கூடி, முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர். த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பில்லை. நாம் தமிழர் கட்சியுடன், எதிர்காலத்தில் தேவையெனில் கூட்டணி குறித்து சிந்திக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link