சென்னை: தலைநகர் சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் அதிமுக 13ல் போட்டியிடுகிறது. எஞ்சிய 3 தொகுதிகளை கூட்டணிக்

சென்னை: தலைநகர் சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் அதிமுக 13ல் போட்டியிடுகிறது. எஞ்சிய 3 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி இருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டார். கூட்டணிக் கட்சிகளுடன் ஏற்கனவே செய்து கொண்ட தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளை அவர் அறிவித்தார்.

அதன்படி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தலைநகர் சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் அதிமுக நேரிடையாக 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 3 தொகுதிகளை மட்டுமே அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி உள்ளது.

அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகளின் விவரம்;

ஆர்.கே. நகர்

கொளத்தூர்

வில்லிவாக்கம்

திரு.வி.க. நகர்(தனி)

எழும்பூர் (தனி)

ராயபுரம்

துறைமுகம்

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி

ஆயிரம் விளக்கு

அண்ணாநகர்

விருகம்பாக்கம்

தியாகராய நகர்

வேளச்சேரி

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்;

மயிலாப்பூர்,( பாஜ)

சைதாப்பேட்டை( அமமுக)

பெரம்பூர்(பாமக)

சென்னை மாவட்டத்தில் உள்ள இந்த 16 தொகுதிகளிலும் 2021ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றியை அள்ளியது. மொத்தமுள்ள 16ல் 15 தொகுதிகளில் திமுக வென்றது. ஒரு தொகுதியில் (வேளச்சேரி) கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வாகை சூடியது.

இந்த 16 தொகுதிகளில் தியாகராய நகர், மயிலாப்பூர், விருகம்பாக்கம், அண்ணாநகர் ஆகிய நான்கு தொகுதிகளிலும் திமுக குறைந்த ஓட்டு எண்ணிக்கையில் தான் வென்றது. குறிப்பாக தியாகராய நகர் தொகுதியில் திமுக வெறும் 137 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றியையே பெற்றது.

கூட்டணிக் கட்சியான காங்கிரசும் கூட வேளச்சேரியில் குறைந்த ஓட்டு எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. அதிமுகவை விட 3352 ஓட்டுகள் தான் கூடுதலாக பெற்றிருந்தது.

2021ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும் போது 2026ம் ஆண்டு தேர்தல் களம் முற்றிலும் மாறி, இருப்பதால் தலைநகர் சென்னையில் இம்முறை திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் யார் கை ஒங்கும் என்பது கணிக்கமுடியாத ஒன்றாகவே இருக்கிறது.

Source link