சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு ரூ.404 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள், ரூ.241 கோடிக்கு அசையா சொத்துகள் என்று

சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு ரூ.404 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள், ரூ.241 கோடிக்கு அசையா சொத்துகள் என்று மொத்தம் ரூ.645 கோடிக்கு சொத்துகள் இருப்பது வேட்பு மனு மூலம் தெரிய வந்திருக்கிறது.

நடிகர் விஜய் தவெக என்ற கட்சியை ஆரம்பித்து 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளார். பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், பெரம்பூர் தொகுதியில் இன்று தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

எந்த ஒரு வேட்பாளராக இருந்தாலும் வேட்பு மனுவில் சொத்து மதிப்பு விவரங்களை குறிப்பிட்டாக வேண்டும் என்பது விதிமுறை. அதன் படி, விஜய்யும் தமது சொத்து மதிப்பு விவரங்களை மனுவில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, விஜய்யிடம் ரூ.404.58 கோடிக்கு அசையும் சொத்துகள் இருக்கின்றன. மனைவி சங்கீதா பெயரில் 15.51 கோடிக்கு அசையும் சொத்துகள் உள்ளன. சாலிகிராம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் ரூ.213.36 கோடியை சேமிப்பு கணக்கில் விஜய் வைத்து இருக்கிறார்.

இந்திரா நகரில் ஆக்சிஸ் வங்கி கிளையில் ரூ.5.79 கோடியான நிலையான வைப்பு(Fixed Deposit) தொகை வைத்துள்ளார். மனைவி சங்கீதாவுக்கு சொந்த கார் இல்லை. விஜய்யிடம் பிஎம்டபிள்யூ 530, டொயோட்டோ ரோலக்ஸ், டொயோட்டோ வெல்பயர். பிஎம்டபிள்யூ ஜி7, மாருதி ஸ்விட்ப் என ஒட்டு மொத்தமாக 6 கோடி மதிப்பில் கார்கள் வைத்துள்ளார்.

விஜய் வசம் 1.20 கோடி மதிப்பில் 883 கிராம் தங்கம் இருப்பு உள்ளது. மனைவி சங்கீதா பெயரில் 4.07 கோடி மதிப்பில் 391 சவரன் நகைகள். ரூ. 1 கோடி மதிப்பில் 134.91 காரட் வைரம் இருக்கிறது. அவரது பெயரில் அசையா சொத்துகள் சந்தை மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். கொடைக்கானலில் 2 எஸ்டேட்கள் உள்ளது.

தன் பெயரில் குற்றவியல் வழக்கள் தண்டனை பெற்ற வழக்குள் ஏதும் இல்லை என்றும் விஜய் குறிப்பிட்டு உள்ளார்.

இதுதவிர கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் வருமானவரித்துறைக்கு விஜய் காட்டிய வருமான வரி கணக்கையும் வேட்பு மனுவுடன் இணைத்து சமர்ப்பித்து உள்ளார். அதில் கொரோனா கால கட்டம் 2020-21ல் ரூ.8.04 கோடி வருமானம் இருப்பதாக கணக்கு காட்டி உள்ளார். 2021-22ல் ரூ.237.46 கோடி, 2022-23ல் ரூ.198.71கோடி வருமானம் இருந்ததாக குறிப்பிட்டு உள்ளார். 2023-24ல் வருமான வரி ரூ.105 கோடியே 69 லட்சத்து 24 ஆயிரத்து 310 செலுத்தி உள்ளார். 2024/25 வருமான வரி ரூ.184 கோடியே 53 லட்சத்து 56 ஆயிரத்து 290 செலுத்தி உள்ளார்.

ஒட்டுமொத்தமாக விஜய்க்கு ரூ.404 கோடியில் அசையும் சொத்து, அசையா சொத்து ரூ.241 கோடி என ரூ.645 கோடிக்கு சொத்துகள் உள்ளன.

நடிகர் விஜய் கல்வித்தகுதி!

1.பத்தாம் வகுப்பு – private study

2.பிளஸ் 2 – private study

3.B.Sc. பாதியில் நிறுத்தம்

விஜய்க்கு மொத்தம் 10 வங்கிக்கணக்குகள் உள்ளன. அவற்றில் 9 வங்கிக்கணக்குகள் தற்போது வரை பயன்பாட்டில் உள்ளன. தேர்தலில் போட்டியிடுவதால், செலவினங்களுக்காக சாலிகிராமத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு துவங்கி உள்ளார்.

விஜய்யிடம் கடன் பட்ட பெற்றோர்!

* தவெக பொதுச்செயலாளர் ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன் கொடுத்துள்ளார் விஜய்
* தந்தை சந்திரசேகருக்கு ரூ.3 கோடியும், தாய் சோபாவுக்கு ரூ.87 லட்சமும் கடன் கொடுத்துள்ளார்.
* மனைவி சங்கீதாவுக்கு ரூ.12 கோடி கடன் கொடுத்துள்ளார்.
*மகன் ஜேசன் சஞ்சய்க்கு 8.78 லட்ச ரூபாயும், மகள் திவ்யா சாசாவுக்கு 4.60 லட்ச ரூபாயும் விஜய் கடன் கொடுத்துள்ளார்.

Source link