சென்னை: '' திமுக கூட்டணியில் எந்த பிரச்னையுமில்லை. இழுபறி ஏதும் இல்லை,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சித்

சென்னை: ” திமுக கூட்டணியில் எந்த பிரச்னையுமில்லை. இழுபறி ஏதும் இல்லை,” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவினரை சந்தித்த பிறகு திருமாவளவன் கூறியதாவது: தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தது. தொகுதி அறிவித்ததும், வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். திமுக கூட்டணியில் கடைசி நேரத்திலாவது பிரச்னை ஏழாதா வெடிக்காதா என காத்திருப்பவர்கள் மீண்டும் ஏமாற போகின்றனர். எந்த பிரச்னையும் இல்லை. இழுபறி ஏதும் இல்லை. 10 க்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணியில் இருக்கும்போது தனித்தனியே ஒவ்வொரு கட்சிகளை பேசும்போது, ஒரு கட்சி கேட்கும் தொகுதிகளை வேறொரு கட்சி கேட்கும் போது இந்த தாமதம் ஏற்படத் தான் செய்யும்.

இதனை அவர்கள் இழுபறி என்கின்றனர். ஆனால், இழுபறி என்பது தான் யதார்த்தம். இன்று இரவு அல்லது நாளை காலை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பிறகு முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு நடந்தாலும், சுயேச்சை என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்வது, அந்த பிரச்னைகளோடு தேர்தலை சந்திப்பது வழக்கமானது தான். இப்போதும் அந்த சூழல் நிலவுகிறது. ஒப்பந்தப்படி 16 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திமுக 16 இடங்களில் போட்டியிடுகிறது. எங்கள் ஒதுக்கப்பட்ட ஒரு இடம் உட்பட 3 இடங்களில் போட்டியிடுகிறோம் என அறிவித்தோம். அதன்படி போட்டியிடுகிறோம். புதுச்சேரியில் பானை சின்னம் வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் கடிதம் அனுப்பினோம். ஆனால் இன்னும் கிடைக்கவில்லை. சுயேச்சை சின்னத்தை பெற்று, அதில் போட்டியிடுகிறார்கள்.அதிமுக கூட்டணியில் சில பிரச்னைகள் உள்ளது. திமுக, கூட்டணி தரப்பில் இருந்து பேசுவதில்லை.

இரட்டை இலையில் நிற்க வேண்டும். தாமரை சின்னத்தில் நிற்க வேண்டும் என நெருக்கடி தருகின்றனர். தமாகாவுக்கு 5 இடங்களை கொடுத்துவிட்டு தாமரை சின்னத்தில் நிற்க வேண்டும் என அழுத்தம் தருகின்றனர். அந்த மாதிரியான பிரச்னைகளை சுட்டிக்காட்டுவதில்லை. ஆனால், திமுக கூட்டணியில் தாமதம் ஏற்பட்டால் இன்னும் இழுபறி என்று சொல்லி கொண்டுள்ளனர். அப்படி ஒன்றும் இல்லை. நாளை காலை அல்லது மாலை தொகுதி களை முதல்வர் அறிவிப்பார்.

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் திமுக பொறுப்பு ஏற்க முடியாது. அனைத்து முடிவுகளையும் தேர்தல் கமிஷன் எடுக்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Source link