சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை விஜயகாந்தின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என்று தமிழக பாஜ

சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை விஜயகாந்தின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என்று தமிழக பாஜ விமர்சித்துள்ளது.சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிகவைத் தவிர ஏனைய கட்சிகள் தங்களின் கூட்டணி நிலைப்பாட்டை எப்போதே வெளிப்படுத்தி விட்டன. கூட்டணி பேரத்தால் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, திமுக கூட்டணியில் இணைந்து கொண்டார். இதன்மூலம், தேமுதிக முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இது தமிழக அரசியலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக அமைந்து விட்டது. தேமுதிகவின் இந்த நகர்வு அதிமுக மற்றும் பாஜவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்து தமிழக பாஜ விமர்சனம் செய்துள்ளது.

எக்ஸ் தளப்பதிவில்; தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த். அதனால், விஜயகாந்துக்கும், அவர் உருவாக்கிய தேமுதிகவுக்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!, இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Source link