சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக மற்றும் கொமதேக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல்

சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக மற்றும் கொமதேக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து, திமுக வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது மதிமுக மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகள் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மதிமுக வேட்பாளர் பட்டியல்

மதுரை மேற்கு – பூமிநாதன்

மொடக்குறிச்சி – செந்தில்நாதன்

கடையநல்லூர் – ராஜேந்திரன்

சீர்காழி(தனி) – செந்தில் செல்வன்

ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், சீர்காழி தொகுதியில் போட்டியிடும் செந்தில்செல்வன் மட்டும் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறார். எஞ்சிய 3 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

கொமதேக வேட்பாளர்கள் பட்டியல்

திருச்செங்கோடு – ஈஸ்வரன்

பொள்ளாச்சி – நித்தியானந்தன்

இந்த இரு வேட்பாளர்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

Source link