சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி மாற்றப்பட்டு உள்ளது. மார்ச் 16ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கை; ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மார்ச் 16ம் தேதி திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறும்.
அப்போது மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள் அனைவரும் தவறாறு கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு துரைமுருகன் அறிக்கையில் கூறி உள்ளார்.
கூட்டத்தில் 2026 சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்படுகிறது. முன்னதாக இந்த கூட்டம் மார்ச் 15ம் தேதி நடப்பதாக இருந்தது. தற்போது அந்த கூட்டம் ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
