சென்னை: திருநெல்வேலி தி.மு.க., கவுன்சிலர் சுதாவின் கணவர் மூர்த்திக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் குறித்த விபரம் கேட்டு, பதிவுத்துறைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், திருநெல்வேலியை சேர்ந்த, அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் தலைவர் மூர்த்தியை, அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர் சுதாவின் கணவரான மூர்த்திக்கு, 25 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன.
இது குறித்த விபரங்களை கேட்டு, தமிழக பதிவுத்துறைக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர். மேலும், மூர்த்தியின் சொத்துக்களை முடக்கவும் அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
