சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற உறுதியை ஏற்று, வீட்டில் கந்த சஷ்டி கவசம் பாடி தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வழிபாடு நடத்தி உள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற சங்கல்பத்தை எடுத்துக் கொண்டு, நாம் அனைவரும் இன்று (23-02-2026) நமது இல்லங்களிலும், கோவில்களிலும், தெருக்களிலும் “கந்த சஷ்டி கவசம்” பாட வேண்டும் என தமிழக பாஜ மற்றும் ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தி இருந்தனர்.
அந்த வகையில், வீட்டில் கந்த சஷ்டி கவசம் பாடி தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வழிபாடு நடத்தி இருக்கிறார். இது தொடர்பாக வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:
சக்திவேல் ஏந்திய குமரனுக்கு உகந்த திதியான சஷ்டியும், கந்தனுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகையும் இணைந்துள்ள இன்றைய நாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற உறுதியை ஏற்று “கந்த சஷ்டி கவசம்” பாடி முருகனை போற்றுவோம்.
அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கந்த சஷ்டி கவசம் பாடி, முருகப்பெருமானின் பேரருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட மனதார பிரார்த்திப்போம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
