சென்னை: தி.மு.க., அறிவித்துள்ள 8000 ரூபாய் கூப்பன் திட்டத்தால் எதிரிகள் கூட்டம் அதிர்ச்சியடைந்துள்ளது என மதிமுக

சென்னை: தி.மு.க., அறிவித்துள்ள 8000 ரூபாய் கூப்பன் திட்டத்தால் எதிரிகள் கூட்டம் அதிர்ச்சியடைந்துள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இது குறித்து வைகோ கூறியதாவது: மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், காலை உணவு திட்டம் என, தி.மு.க., அரசின் திட்டங்களும், மூன்று மாத மகளிர் தொகையுடன் கோடை கால நிதியை சேர்த்து 5000 ரூபாய் வழங்கியதும், பெண்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது

தற்போது, தி.மு.க., அறிவித்துள்ள 8000 ரூபாய் கூப்பன் திட்டத்தால் எதிரிகள் கூட்டம் அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வரக்கூடாது. இத்தனை ‘சீட்’ என பேரம் பேசும் இடத்தில் வைகோ இல்லை.

மத்திய அமைச்சர் பதவியையே வேண்டாம் என்றவன், இந்த வைகோ. அ.தி.மு.க., ஆட்சியில், துாத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். ஸ்டெர்லைட் ஆலை முதலாளிகளிடம், வாங்குவதை வாங்கி விட்டு, இபிஎஸ் தான் துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை என்ற புதிய சட்டம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு வைகோ கூறினார்.

Source link