சென்னை: தி.மு.க., வாக்குறுதிகளுக்கு மத்திய அரசு நிதி கொடுக்குமா? என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து தினகரன் கூறியதாவது: கடந்த 2021ல் தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை, என குற்றம் சாட்டுகின்றனர். இவர்கள் கொடுத்த வாக்குறுதிக்கு, மத்திய அரசு எப்படி நிதி கொடுக்க முடியும்?
பள்ளி கல்வித்துறை அமைச்சர், ஒரு விளையாட்டு பிள்ளை; உதயநிதி ரசிகர் மன்ற தலைவர். சுகாதாரத் துறை அமைச்சர், ‘தமிழகத்தில் கஞ்சாவே இல்லை’ என்றார். மறுநாளே, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கஞ்சா செடி இருப்பதாக ஊடகங்கள் படம் பிடித்து போட்டன.
மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என தெரிந்து விட்டதால், முடிந்த அளவுக்கு சுருட்டும் நிலைக்கு, தி.மு.க.,வினர் வந்து விட்டனர். எந்த துறையாக இருந்தாலும் 30% கமிஷன் கொடுக்க வேண்டி உள்ளது.
பா.ஜ., ஆளும் நம் நாட்டை, ஹிந்துத்துவ நாடு என்கின்றனர். இந்தியாவில் பாதுகாப்பாக, இப்தார் நோன்பு கடைப்பிடித்தனர். முஸ்லிம் நாடான பாகிஸ்தானில், பாதுகாப்பு இல்லாமல் வீதிகளில், இப்தார் நோன்பு செய்யும் நிலை இருந்தது. இவ்வாறு தினகரன் கூறினார்.
