சென்னை: த.மா.கா., போட்டியிடும், ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, அக்கட்சி தலைவர் வாசன் அறிவித்தார். அ.தி.மு.க., –

சென்னை: த.மா.கா., போட்டியிடும், ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, அக்கட்சி தலைவர் வாசன் அறிவித்தார்.

அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணியில், த.மா.கா.,வுக்கு, ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில், தாமரை சின்னத்தில், அக்கட்சி போட்டியிட உள்ளது. த.மா.கா., வேட்பாளர் பட்டியலை சென்னையில் நேற்று அக்கட்சி தலைவர் வாசன் வெளியிட்டார்.

அதன்படி, ஈரோடு மேற்கு – யுவராஜா; ஒட்டன்சத்திரம் – விடியல் சேகர்; கும்பகோணம் – அசோக்குமார்; கிள்ளியூர் – நிவின் சைமன்; ராணிப்பேட்டை – கார்த்திகேயன் ஆகியோர் த.மா.கா., வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

த.மா.கா., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘தமிழகத்தில் அமைய இருக்கும், அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சியில், காமராஜர் மற்றும் மூப்பனார் கோட்பாடுகளான பொது வாழ்வில் நேர்மை, தனி வாழ்வில் எளிமை, ஆட்சி அதிகாரத்தில் துாய்மை, வெளிப்படையான நிர்வாகம், மத்திய அரசுடன் இணக்கமான போக்கு என்ற ஐந்து அம்ச தாரக மந்திரத்தை அடைய உறுதியளிக்கிறோம்’ என கூறப்பட்டுள்ளது.

Source link