சென்னை: 'நாங்க GST ஆபீசர்ஸ்' – முதலாளியிடம் 1.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த தொழிலாளரின்‌ பிளான்

முதலாளியிடம் 1.5 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடித்த தொழிலாளி.

கொள்ளை - சித்தரிப்பு‌ படம்

சென்னை சவுகார்பேட்டையில் கூரியர் நிறுவனம் ஒன்றை வைத்திருப்பவர் ராவல்சிங்.

சென்னை விமான நிலையத்திற்கு இவரது நிறுவனத்திற்கு 1.5 கிலோ‌ எடை கொண்ட தங்க நகைகளின் பார்சல்கள் வந்துள்ளன.

அதை எடுத்து வர, தன் கடையில் வேலை பார்க்கும் கோவாராம் மற்றும் பக்கத்துக் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்யும் ஜித்தேந்தர் குமாரையும் அனுப்பியிருக்கிறார் ராவல்சிங்.

பைக்கில் சென்ற இருவரும் நீண்ட நேரமாக கடைக்கு வரவில்லை. இருவரது போனுமே “ஸ்விட்ச் ஆஃப்’.

தங்கம் | நகைகள்
தங்கம் | நகைகள்
கோப்புப் படம்

கோவாராமின் போன்கால்

கொஞ்ச நேரத்தில், கோவாராமிடம் இருந்து மற்றொரு எண்ணில் இருந்து கால் வந்திருக்கிறது. அருகில் இருந்த ஆட்டோகாரரிடம் இருந்து போன் வாங்கி பேசுவதாக கூறியிருக்கிறார்.

கோவாராமும், ஜித்தேந்தர் குமாரும் தங்க நகைகள் பார்சல்களை வாங்கி கொண்டு கிண்டி வழியே வந்துக் கொண்டிருந்திருக்கின்றனர்.

அப்போது, அவர்களை வழிமறித்த இருவர் தங்களை ‘செங்கல்பட்டு ஜி.எஸ்.டி ஆபீசர்ஸ்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்ததாக, பார்சல் மற்றும் மொபைல் போன்களையும் வாங்கிக் கொண்டு ஆட்டோவில் அழைத்து சென்றிருக்கிறார்கள்.

பெருங்களத்தூர் அருகே அதிகாரிகளாக அறிமுகம் செய்து கொண்டவர்கள் எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள்.

அதன் பின் தான், ராவல்சிங்கிற்கு போன் செய்திருக்கிறார் கோவாராம்.

ராவல்சிங் போலீஸில் புகார் கொடுக்க விசாரணை தொடங்கியுள்ளது.

விசாரணையில், இவை அனைத்தும் ஜித்தேந்தர் குமாரின் வேலை என்று தெரிய வந்திருக்கிறது.

தங்க நகைகளைக் கொள்ளையடிப்பதற்காக தனது சொந்த ஊரான ராஜஸ்தானில் இருந்து இரு நண்பர்களை வரவழைத்திருக்கிறார் ஜித்தேந்தர் குமார்.

தற்போது ஜித்தேந்தர் குமார் மற்றும் அவருடைய ஒரு நண்பரை கைது செய்திருக்கிறார்கள் போலீஸார். இன்னொருவரை தேடி வருகிறார்கள் போலீஸார்.

Source link