சென்னை: பாமக தலைவர் அன்புமணிக்கு எதிராக அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
பாமக சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக்கோரி ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த அன்புமணி தரப்பு, ராமதாசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, பாமக அங்கீகாரம் ரத்து ஆனதற்கும், அன்புமணியின் மோசமான செயல்பாடுகள் தான் காரணம். தற்போது அவர் கட்சி உறுப்பினர் கூட கிடையாது என ராமதாஸ் கூறியிருந்தார்.ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பு வாதங்களை முன்வைக்க உத்தரவிட்டு விசாரணையை 13 ம் தேதிக்கு ஒத்திவைத்து இருந்தார்.
இந்நிலையில் பாமக பொதுச்செயலர் வடிவேல் ராவணன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,” கட்சியின்பொதுச்செயலாளரான தன்னை வழக்கில் இணைக்க உரிமையியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க விதிக்க வேண்டும்,” எனக்கூறியிருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, ” உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், ராமதாஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டதுடன் விசாரணையை ஏப்.,10 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
