சென்னை: பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின், வரும் 12, 13ம் தேதிகளில் பிரசாரம்

சென்னை: பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின், வரும் 12, 13ம் தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.

தமிழகம் வரும் நிதின் நபின், மதுரை தெற்கு – ராம சீனிவாசன், சாத்துார் – நயினார் நாகேந்திரன், ராமநாதபுரம் – நாகேந்திரன், தஞ்சை – முருகானந்தம், அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த், கந்தர்வக்கோட்டை – உதயகுமார் ஆகிய பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்கிறார்.

இந்நிலையில், ‘விடியல் அமைச்சர்களின் இருண்ட பக்கங்கள்’ என்ற வீடியோவை, சமூக வலைதளங்களில் பா.ஜ., வெளியிட்டு, பிரசாரம் செய்கிறது.

பா.ஜ.,வினர் கூறியதாவது:

பா.ஜ., தரப்பில், ‘தி.மு.க., பைல்ஸ்’ என்ற பெயரில், தி.மு.க., அமைச்சர்களின் சொத்து பட்டியல்கள் வெளியிடப்பட்டன. இவை, மக்களின் கவனத்தை ஈர்த்தன.

தற்போது, ‘விடியல் அமைச்சர்களின் இருண்ட பக்கங்கள்’ என்ற பெயரில், ஒவ்வொரு அமைச்சரும், தி.மு.க.,வில் சேர்ந்தது முதல், இதுவரை அவர்கள் மீதுள்ள வழக்குகள், குற்றச்சாட்டுகள்; சர்ச்சையாக பேசி சிக்கியது உள்ளிட்ட தகவல்களுடன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்பான வீடியோ வெளியிடப்பட்ட நிலையில், தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சரின் வீடியோவும் வெளியாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link