சென்னை: பெண் வேட்பாளர்களை அறிவிப்பதில் திமுகவை தவெக பின்னுக்கு தள்ளி 23 பேரை வேட்பாளர்களாக

சென்னை: பெண் வேட்பாளர்களை அறிவிப்பதில் திமுகவை தவெக பின்னுக்கு தள்ளி 23 பேரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தவெக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இன்று வெளியிட்டு வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தினார். 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களும் கணிசமான எண்ணிக்கையில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், மற்ற கட்சிகளை போலவே பெண் வேட்பாளர்களை தவெக அறிவித்து இருக்கிறது. நாம் தமிழரில் 50 சதவீதம் மகளிருக்கு இடஒதுக்கீடு என்ற முழக்கத்தின் அடிப்படையில் சரிபாதி (117) வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டனர்.

இந்த விஷயத்தில் ஆளும் திமுகவை பின்னுக்கு தள்ளி இருக்கிறார் விஜய். இன்று அறிவிக்கப்பட்ட பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை மட்டும் 23. திமுகவில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 18 மட்டுமே. அதிமுகவில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 17 ஆக இருக்கிறது.

தவெக பெண் வேட்பாளர்கள் பட்டியல்;

திரு..வி.க. நகர்(தனி) – பல்லவி

குமாரபாளையம் – விஜயலட்சுமி

திருப்பூர் வடக்கு – சத்யபாமா

மதுராந்தகம் (தனி) – எழில் கேத்தரின்

ராணிப்பேட்டை – தாஹிரா

குடியாத்தம் (தனி) – சிந்து

பாப்பிரெட்டிப்பட்டி – திலகவதி

கெங்கவல்லி (தனி) – சுஜாதா

ஏற்காடு (பழங்குடியினர் தொகுதி) – ஜே. லெட்சுமி

தாராபுரம் (தனி) – கௌரி சித்ரா

பவானிசாகர் (தனி) – கலைச்செல்வி

அவிநாசி (தனி) – கமலி

கவுண்டம்பாளையம் – கனிமொழி

ஆத்தூர் – கலைச்செல்வி

வேடசந்தூர் – நாகஜோதி

குன்னம் – ரேவதி

ஜெயங்கொண்டம் – கவிதா

சிவகங்கை – குழந்தை ராணி நாச்சியார்

ராஜபாளையம் – ஜெகதீஸ்வரி

சிவகாசி – கீர்த்தனா

முதுகுளத்தூர் – மலர்விழி

வாசுதேவநல்லூர் (தனி) – அமுதராணி

பல்லாவரம் – காமாட்சி

தவெக பெண் வேட்பாளர்களில் 8 பெண்கள் தனித்தொகுதியிலும், ஏற்காடு(பழங்குடி) தொகுதியில் ஜே. லெட்சுமி என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கக் கூடிய அம்சமாக உள்ளது. தமிழகத்தில் ஏற்காடு, சேந்தமங்கலம் ஆகிய இரண்டே இரண்டு தான் பழங்குடியினருக்கான ஒதுக்கப்பட்டு உள்ள தொகுதிகள்.

ஏற்காடு தொகுதியில் அதிமுக வேட்பாளராக உஷாராணி அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக வேட்பாளராக ரேவதி மாதேஸ்வரன் களம் காண்கிறார். மற்றொரு பழங்குடியின தொகுதியான சேந்தமங்கலத்தில் திமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமியின் மகள் பூமலர் அறிவிக்கப்பட்டு உள்ளார். இங்கு அதிமுக வேட்பாளராக சந்திரசேகரன் களத்தில் இருக்கிறார். தவெக வேட்பாளராக வெங்கடேஷ் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

Source link