சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்ய

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

தவெக தலைவர் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தலைவர்கள் அனைவரும் பிரசாரத்தில் உள்ளனர். மாநிலம் முழுவதும் சுற்றி வருகின்றனர்.

திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை கமல் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்தார்.

இந்நிலையில், கமல் வரும் 17 ம் தேதி முதல் பிரசாரம் செய்ய உள்ளார். ஏப்.,20 வரை அவர் 26 தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

இதற்கான பட்டியல் வெளியாகி உள்ளது.

இதன்படி,ஏப்.,17: துறைமுகம், பெரம்பூர், கொளத்துார், வில்லிவாக்கம்

ஏப்.,18: தி.நகர், மயிலாப்பூர், சேப்பாக்கம், வேளச்சேரி

ஏப்.,19: அவிநாசி, கோவை தெற்கு

ஏப்.,20: திருச்சி கிழக்கு, திருவரங்கம், லால்குடி

விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கமல் பிரசாரம் செய்ய உள்ளார்.

Source link