சென்னை: மத்திய அரசு திட்டங்களில் தி.மு.க., ஊழல் செய்கிறது என தமாகா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வாசன் கூறியதாவது: மத்திய பா.ஜ., அரசின் திட்டங்களில், தி.மு.க., அரசு ஊழல் செய்துள்ளது. மின் கட்டணம், வீட்டு வரி உயர்வு என, பல வரி உயர்வுகளை தி.மு.க., அரசு கொண்டு வந்தது. இதனால் மக்கள் படும் கஷ்டம் ஏராளம். எந்த கட்சியும் தராத, நம்பிக்கையான, நாணயமான வாக்குறுதிகளை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தந்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் வென்று, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், மத்திய அரசின் ஒப்புதலோடு, திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில், உணவு பதப்படுத்தப்படும் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வலங்கைமானில், நவீன அரிசி ஆலை அமைக்கப்படும். ஆலங்குடியில், மகளிர் கல்லூரி கொண்டு வரப்படும். திருவாரூரில், அரசு பொறியியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வாசன் கூறினார்.
