சென்னை: முதல்வர் ஸ்டாலின், நாளை திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார். இது குறித்து, தி.மு.க.,

சென்னை: முதல்வர் ஸ்டாலின், நாளை திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார்.

இது குறித்து, தி.மு.க., வெளியிட்ட அறிக்கை:

தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பிரசாரத்தை, முதல்வர் ஸ்டாலின், திருவாரூரில் நாளை துவக்குகிறார். திருவாரூர் தெற்கு ரத வீதியில் மாலை 5:00 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிக்கிறார்.

பின், ஏப்., 1 காலை 9:00 மணிக்கு திருச்சி உழவர் சந்தையில் நடைபெறும் கூட்டத்தில், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லுார், ஸ்ரீரங்கம், மணப்பாறை, முசிறி, துறையூர் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பேசுகிறார்.

அன்றைய தினம் மாலை 5:00 மணிக்கு, கரூர் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்று, அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிக்கிறார்.

ஏப்., 2 காலை 9:00 மணிக்கு ஈரோடு கூட்ட த்தில் ஸ்டாலின் பங்கேற்று, பவானிசாகர், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், ஈரோடு கிழக்கு, பவானி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்கிறார்.

அன்றைய தினம் மாலை 5:00 மணிக்கு, கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், சூலுார், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link