சென்னை: முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்துக்கு செல்லும்போது, அரசு அதிகாரிகள் உடன் சென்று எடுக்கும் வீடியோ திமுக சேனலில் வெளியாகிறது. அரசு அதிகாரிகள், முதல்வருக்கு தேர்தல் பணி செய்தால் அந்த தேர்தலே செல்லாது என அதிமுக எம்பி இன்பதுரை கூறியுள்ளார்.
தேர்தல் கமிஷனில் முதல்வர் ஸ்டாலின் குறித்து புகார் ஒன்றை அளித்த பிறகு இன்பதுரை நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் கமிஷனில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளேன். முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்கிறார். அவர் பின்னால் ஒரு வாகனம் செல்கிறது. TN06 AU 2345 என்ற இன்னோவா வாகனம் செல்கிறது. அது அரசு வாகனம். தமிழக அரசு பிரஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், அரசு அதிகாரிகள் இருக்கின்றனர். இணை கமிஷனர் பிரபுகுமார், கூடுதல் கமிஷனர் மேகவர்ணம், FIlm Division CHief Producer ரவி, முகில் என்ற வீடியோகிராபர், பிரபுகுமார், டிரைவர் பிரபாகர், Power Distribution Corporation ஐ சேர்ந்த லோகேஷ்குமார் ஆகியோர் உள்ளனர். இது தேர்தல் நடத்தை விதிமீறல்.தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்ட பிறகு அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. ஆனால், இவர்கள் செல்கின்றனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டும் சொல்லி கேட்கவில்லை.நடவடிக்கை மட்டும் போதாது. 1975 ல் முன்னாள் பிரதமர் இந்திரா, வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்தனர். எதற்காக என்றால், அரசு அதிகாரியான எஸ்பால் கபூர் என்பவர் அவருக்கு தேர்தல் பணி செய்தார் என்பதை இந்திராவுக்கு எதிராக போட்டியிட்ட ராஜூநாராயணன் வழக்கு தொடர்ந்தார். அதில்,இந்திரா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஸ்டாலினுக்கும் இதே நிலைதான். இந்த அரசு அதிகாரிகள் துணையோடு அவர்கள் எடுக்கும் வீடியோக்கள் செய்தி மக்கள் தொடர்புத்துறை டிஐபிஆர் கருவிகளை பயன்படுத்தி அனைத்து மீடியாக்களுக்கும் வீடியோ, செய்திகளை அனுப்புகின்றனர்.
அது DMkFOr Tn என்ற யூடியூப் சேனலுக்கும் சென்றுள்ளது. அது குறித்து IP எண்ணையும் தெரிவித்துள்ளேன். அரசு அதிகாரிகள் முதல்வருக்கு தேர்தல் பணி செய்தார்கள் என்றால் அந்த தேர்தலே செல்லாது. இது சட்டநிலை. இது குறித்து விசாரிக்க வேண்டியது தேர்தல் கமிஷன் கடமை. நான் போகவில்லை என அரசு அதிகாரிகள் சொல்லலாம். ஆனால், எணன்னிடம் வீடியோ உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
