சென்னை: மேற்குவங்க கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மரியாதை நிமித்தமாக அவரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் ராஜினாமா செய்ததையடுத்து, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அம்மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, ‘கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர், தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பை கவனிப்பார்’ என, ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று (மார்ச் 07) கவர்னர் ரவியை மரியாதை நிமித்தமாக முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அப்போது கவர்னர் ரவிக்கு சால்வை அணிவித்து, திருவள்ளுவர் சிலையை வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பவியேற்ற சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
