சென்னை : ரஷ்யாவில் இருந்து, ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் உடன், மூன்றாவது கப்பல், இன்று மார்ச் 26 ம் தேதி சென்னை துறைமுகம் வந்தது.
இது குறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நீடித்து வருவதால், ஈரானில் இருந்து கப்பலில், கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, நம் நாட்டிற்கான கச்சா எண்ணெய் தேவையை போக்க, மத்திய அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஈரான் தவிர, வாய்ப்புள்ள இதர நாடுகளில் இருந்து கூடுதலாக கச்சா எண்ணெய், இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
அதன்படி, ரஷ்யாவில் இருந்து, ஏற்கனவே இரண்டு கப்பல்கள் வாயிலாக, தலா ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய், சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கிடையே, மூன்றாவது கப்பலில் இன்று ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை துறைமுகம் வந்தது. மற்றொரு கப்பலும், நாளை மறுநாள் சென்னை வர உள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து, கச்சா எண்ணெய் வினியோகத்தில் எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
