சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட பாமக நிறுவனர் ராமதாஸ் உதவியாளர் சாமிநாதன் வேட்புமனு தாக்கல்

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட பாமக நிறுவனர் ராமதாஸ் உதவியாளர் சாமிநாதன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

பாமகவில் நிறுவனர் ராமதாஸ் , தலைவராக இருக்கும் அவரது மகன் அன்புமணிக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இணைந்த அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. அதற்காக இன்று அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி சவுமியா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ராமதாஸ் உதவியாளரான சாமிநாதனும், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ராமதாஸ் ஆதரவாக 2 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில் சாமிநாதன் வேட்புமனுவை தமிழக சட்டசபையின் கூடுதல் செயலாளரிடம் தாக்கல் செய்துள்ளார்.

Source link