சென்னை: 'வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும். தமிழகத்தில் நாளை முதல் ஐந்து நாட்கள்

சென்னை: ‘வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும். தமிழகத்தில் நாளை முதல் ஐந்து நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதன் அறிக்கை:

பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று காலை 8:30 மணி அளவில் அதே பகுதியில் நிலவியது.

இது, மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளில் இன்று வலுப்பெறும்.

நாளை, தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை மறுதினம் முதல் 24ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link