சென்னை: வங்கக்கடலில் வரும் பிப்ரவரி 15ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தேனி, விருதுநகர்,

சென்னை: வங்கக்கடலில் வரும் பிப்ரவரி 15ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் நாளை (பிப்ரவரி 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை: வங்கக்கடலில் வரும் பிப்ரவரி 15ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று (பிப் 12) லேசான மழை பெய்யக் கூடும். தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் நாளை (பிப்ரவரி 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source link