சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணிக்கு தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள்

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணிக்கு தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் சங்கத்தினர் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில், பல்வேறு அமைப்பிகளின் ஆதரவையும் திரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸை சந்தித்த தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் சங்கத்தினர், வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழக உருது முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்பட 8 முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகளின் சந்தித்து பேசினர். அப்போது, தமிழக அரசின் தலைமை காஜி நியமன விவகாரத்தில் திமுக அரசின் நடவடிக்கையில் ஏற்பட்ட அதிருப்தியை அவரிடம் வெளிப்படுத்தினர்.

அதாவது, தமிழகத்தில் மொத்தம் 3 சதவீதம் உள்ள முஸ்லிம் மக்கள் தொகையில், பெரும்பான்மையாக 2.3 சதவீதத்துடன் சூபி பிரிவினர் இருந்து வரும் நிலையில், சூபி அல்லாத முஸ்லிம்களில் இருந்து ஒருவரை தலைமை காஜியாக நியமித்ததற்கு தங்களவு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முஸ்லிம்களின் பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட ஒரு பிரிவினர் ஆதரவு அளிப்பது, அதிமுகவுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

Source link