சென்னை: 'வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய

சென்னை: ‘வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் உட்பட தென் மாவட்டங்கள் மீது, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில், கோவை, நீலகிரி மாவட்டங்களில், சில இடங்களில் இன்றும், நாளையும், லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில் பிற இடங்களில் வறண்ட வானிலை காணப்படும்.

தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 2 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link