சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த 2-வது முனையத்தை டிசம்பர் மாதத்திற்குள் திறக்க முடிவு

இந்த பணிகளை இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டத்தால் ஸ்டீல் உட்பட ஒரு சில பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பணிகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

தற்போது வரை 40 சதவீத கட்டுமான பணிகள் முடிந்து உள்ளன. இப்போது சர்வதேச முனையத்தின் முன்பக்கம் பகுதியில் பணிகள் மேற்கொள்ள இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வருகை மற்றும் புறப்பாடு முனையத்திற்கு இடையிலான வாகன போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பணிகள் முடிந்ததும் உட்புற வேலைகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து 2-ம் கட்ட சர்வதேச முனைய பணி முழுவதும் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் முடித்து திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Source link