சென்னை: வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்குவோர், அதன் மதிப்பு, 20 லட்சம் ரூபாய் வரை இருந்தால்,

சென்னை: வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்குவோர், அதன் மதிப்பு, 20 லட்சம் ரூபாய் வரை இருந்தால், பத்திரப்பதிவின்போது, ‘பான்’ எண் அளிக்க வேண்டியதில்லை.

சொத்து வாங்குவோர் அது குறித்த விபரங்களை, வருமான வரித் துறைக்கு மறைப்பதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கட்டாயம்

இதன்படி, சொத்து வாங்குவோர், அதற்கான பத்திரத்தை பதிவு செய்யும்போது, ‘பான்’ எனும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் விபரங்களை அளிக்க வேண்டும்.

இந்த எண் இல்லாதவர்கள், அதற்குரிய தனி படிவத்தில் உறுதிமொழி அளிக்க வேண்டும். இதில், தற்போதைய நிலவரப்படி, 10 லட்சம் ரூபாய் வரையிலான சொத்துக்களை பதிவு செய்யும்போது, பான் எண் அளிப்பது கட்டாயம்.

இந்நிலையில், வருமான வரி சட்ட விதிகள் திருத்தப்பட்டு உள்ளன. இந்த புதிய விதிகள், ஏப்., 1 முதல் அமலுக்கு வரவுள்ளன.

இதில், பான் எண் அளிப்பதற்கான பல்வேறு வரம்புகள் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, 20 லட்சம் ரூபாய் மதிப்பு வரையிலான சொத்துக்களை பதிவு செய்ய, பான் எண் அளிப்பதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

எனவே, 20 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பத்திரங்களை பதிவு செய்யும்போது மட்டும், பான் எண் தெரிவித்தால் போதும்.

இதில் சொத்து வாங்குவது, விற்பது, பரிசாக கொடுப்பது, கூட்டாக மேம்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளுக்கு, இந்த விலக்கு பொருந்தும் என, புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link