சென்னை: வெங்காயம் உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது, கண்ணீர் வரும். அது போல, திமுக ஆட்சியை போலி

சென்னை: வெங்காயம் உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது, கண்ணீர் வரும். அது போல, திமுக ஆட்சியை போலி விளம்பரங்களுக்கு அப்பால் உரித்துப் பார்த்தால், உள்ளே ஒன்றும் இருக்காது என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

இன்றைய தினம், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் நேர்ந்த மக்களின் அன்பு வெள்ளத்தில் நீந்தி சென்று, கூட்டணி வெற்றி வேட்பாளர்களுக்கு பிரசாரம் மேற்கொண்டேன். வெங்காயம் உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது. ஆனால் இருப்பவருக்கு கண்ணீர் வரும்.

அதுபோல, திமுக ஆட்சியை போலி விளம்பரங்களுக்கு அப்பால் உரித்துப் பார்த்தால், உள்ளே ஒன்றும் இருக்காது. மக்களின் கண்ணீரும், வேதனையும் மட்டுமே மிஞ்சும். இப்படிப்பட்ட மோசமான ஆட்சி வீழ்வதற்கான நேரம் வந்துவிட்டது.

தனது ஆட்சிக்காலம் முழுவதும் அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியவர், இன்று அஇஅதிமுக தேர்தல்அறிக்கை-யை காப்பி பேஸ்ட் செய்து திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு உள்ளார். மக்களுக்கு தேவை இவர்களின் ஸ்டிக்கர் ஆட்சியா? இல்லை, நமது ஒரிஜினல் ஆட்சியா?மக்களே, தேர்தல் நாளை மறந்துவிடாதீர்கள்.

இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.

Source link