சென்னை: ஹோலி பண்டிகையை சென்னை ஐஐடி மாணவர்களுடன் இணைந்து கவர்னர் ரவி பாடல் பாடி கொண்டாடினார்.நாடு முழுதும்

சென்னை: ஹோலி பண்டிகையை சென்னை ஐஐடி மாணவர்களுடன் இணைந்து கவர்னர் ரவி பாடல் பாடி கொண்டாடினார்.

நாடு முழுதும் சாதி, மதம் கடந்து மக்கள் ஒருவருக்கு ஒருவர் வணணப் பொடிகளைத் தூவி அன்பை பரிமாறிக் கொள்ளும் ஹோலி பண்டிகை இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கவர்னர் ரவி வெளியிட்ட அறிக்கையில், இந்த ஹோலி வளம், மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டுவரட்டும். 2047 ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப அசைக்க முடியாத உறுதியுடன் நம்மை வழிநடத்தட்டும் எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில்,ஹோலியை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் ரவி, ஐஐடி மாணவர்களுடன் பகுவா பாடல் பாடி பண்டிகையை கொண்டாடினார். இது குறித்த வீடியோவை கவர்னர் மாளிகை வெளியிட்டு உள்ளது.

Source link