பெங்களூரு,:மத்திய பொது நிறுவனமான, பெல் என்ற பாரத் எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர், ட்ரோன் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்ய ஆர்.ஆர்.பி., எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிபன்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆர்.ஆர்.பி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், செமிகண்டக்டர் உற்பத்தியிலும், ஆர்.ஆர்.பி., டிபன்ஸ் நிறுவனம், ட்ரோன், ஆளில்லா அமைப்புகள் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகின்றன.
இரு நிறுவனங்களுடன் இணைந்து, கண்காணிப்பு அமைப்புகள், துல்லியமாக குறிவைக்க ஆயுத குறி, செமிகண்டக்டர் கருவிகள், அடுத்த தலைமுறை ட்ரோன்கள், இதர நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்க இருப்பதாக பெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்புகள், உள்நாட்டு உற்பத்திக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இறக்குமதியை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
