செம்மஞ்சேரியில் தனுஷுக்கு பிரம்மாண்ட வரவேற்பு:டெல்லி பயணம் முதல் மகளிர் அணி கூட்டம் வரை – அடுத்தகட்ட நகர்வு? – dhanush women’s wing meeting in semmancheri chennai political plans and welfare movement

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், நடிகர் தனுஷின் நற்பணி இயக்கம் சார்பில் மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (அக். 25) பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இக்கூட்டம் தனுஷின் ரசிகர்களிடையேயும், தமிழக அரசியல் மற்றும் திரை உலக வட்டாரங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

செம்மஞ்சேரி ஜெப்பியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியை முன்னிட்டு வளாகம் முழுவதும் வண்ணமயமான வரவேற்புப் பதாகைகள் மற்றும் கட்-அவுட்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்துள்ள மகளிர் அணி நிர்வாகிகளின் சார்பில் தனுஷை வரவேற்று ,பெண்களின் குரல் உயர்ந்தால் சமூகத்தின் எதிர்காலமும் உயர்ந்திடுவோம்,“எங்கள் அன்பின் அண்ணன் தனுஷ்,எங்கள் தலைவரே” போன்ற வாசகங்கள் அடங்கிய பெரிய அளவிலான பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன

ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்பு

இன்று காலை 11 மணியளவில் நடிகர் தனுஷ் கல்லூரி வளாகத்திற்கு வருகை தந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அவருக்காக இரண்டு கேரவன்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சிக்காக சுமார் 3,000 பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட குளிரூட்டப்பட்ட அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 3,000 முதல் 5,000 வரையிலான மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் மகளிர் அணி நிர்வாகிகளுடன் நடிகர் தனுஷ் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக் கொள்வதுடன், அவர்களுக்குப் பல்வேறு சிறப்புப் பரிசுகளையும் வழங்கத் திட்டமிட்டுள்ளார்.

அடுத்தகட்ட நகர்வு என்ன?

நடிகர் தனுஷின் ரசிகர் மன்றமானது சமீபகாலமாக தீவிர‘நற்பணி இயக்கமாக’மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அமைப்பை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும்,தனுஷ் அண்மையில் டெல்லி சென்று வந்ததும், தற்போது மகளிர் அணியை ஒருங்கிணைத்துப் பிரம்மாண்ட கூட்டத்தைக் கூட்டியிருப்பதும் அரசியல் ரீதியான பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள சூழலில், தனுஷும் நற்பணி இயக்கத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று அரசியல் கட்சியாக மாற்றுவாரா அல்லது சமூகப் பணிகளை மட்டுமே விரிவுபடுத்துவாரா என்பது குறித்த பல்வேறு ஆலோசனைகள் இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. மகளிர் அணி நிர்வாகிகளின் இந்த மாபெரும் சந்திப்பு, நடிகர் தனுஷின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் செல்வாக்கும், டெல்லி கணக்கு

கடந்த மூன்று தினங்களாக டெல்லியில் முக்கிய தலைவர்களுடன் நடிகர் தனுஷ் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனின் போது பல முக்கிய பொறுப்புகளை 2028 ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் தான் முழுமையாக இறங்கப் போவதாக தனுஷ் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் பதவி, மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்பி இடம், மேலும் 2028-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு எனப் பல்வேறு பெரிய வாக்குறுதிகளும், அரசியல் பேரம் குறித்த தகவல்களும் வெளியாகி வருகின்றன. இருப்பினும், மக்கள் மத்தியில் தமக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மக்கள் செல்வாக்கிற்கு முன்னால், டெல்லியின் எந்தவொரு அரசியல் திட்டமோ அல்லது வியூகமோ பலனளிக்கப் போவதில்லை என்பதே கள நிலவரமாக உள்ளது. சினிமா புகழைக் கையில் எடுத்துக்கொண்டு, அதன் மூலம் அரசியலில் குறுக்கு வழியில் நுழைய முயலும் இதுபோன்ற முயற்சியோ அல்லது அரசியல் நகர்வுகளோ எதுவாக இருந்தாலும், அவை மக்கள் சக்தியின் தீவிரமான அலைவீச்சில் அடித்துச் செல்லப்படும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. மக்கள் யாருக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதை காலமே முடிவெடுத்து நிரூபிக்கும் என்பதைத் தமிழக அரசியல் வரலாறு காட்டி வருகிறது.

Source link