செஸ்: சசிகிரண் சாம்பியன்

பிராகு: பிராகு செஸ் தொடரின் ‘கரேல்’ பிரிவில் சசிகிரண் சாம்பியன் ஆனார்.

செக்குடியரசில், பிராகு செஸ் தொடர் நடந்தது. மாஸ்டர்ஸ் பிரிவில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், சாலஞ்சர்ஸ் பிரிவில் உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனை திவ்யா, என மூன்றாவது இடம் பிடித்தனர். கரேல் ஜானெசெக் ஓபன் பிரிவில் போட்டி நடந்தது.

இந்தியா சார்பில் மயங்க் சக்ரவர்த்தி, சசிகிரண் கிருஷ்ணன் உட்பட ஒட்டுமொத்தமாக 356 பேர் பங்கேற்றனர். இதில் சிறப்பாக செயல்பட்ட சசிகிரண், பங்கேற்ற 9 சுற்றில் 7ல் வெற்றி பெற்றார். 2ல் ‘டிரா’ செய்தார். மொத்தம் 8.0 புள்ளியுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார்.

தவிர, 2027ல் நடக்க உள்ள பிராகு செஸ் தொடரின் சாலஞ்சர் பிரிவில் பங்கேற்க சசிகிரண் தகுதி பெற்றார். ஜெர்மனியின் கிறிஸ்டியன் (7.5), ருமேனியாவின் விளாடிமிர் (7.5) அடுத்த இரு இடம் பெற்றனர்.

Source link