பாப்ஹாஸ்: சைப்ரஸ் தீவில் ‘கேண்டிடேட்ஸ்’ செஸ் தொடர் (ஆண்கள், பெண்கள்) நடக்கிறது. பெண்கள் பிரிவில் உலக கோப்பை வென்ற இந்தியாவின் திவ்யா 20, வைஷாலி 24, உட்பட 8 பேர் பங்கேற்கின்றனர். இதன் 9வது சுற்றில் திவ்யா, வைஷாலி மோதினர்.
வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி, துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார். வேறு வழியில்லாத நிலையில் திவ்யா 31 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். 9 சுற்று முடிவில் சீனாவின் ஜு ஜினெர், வைஷாலி என இருவரும் தலா 5.5 புள்ளியுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். உக்ரைனின் அனா முஜிசக் (5.0) 3வது இடத்தில் உள்ளார். ரஷ்யாவின் கேத்தரினா லாக்னோ (4.5), திவ்யா (4.5) என இருவரும் 4, 5வது இடங்களில் உள்ளனர்.
