செஸ்: திவ்யா 'டிரா'

பிராகு: செக்குடியரசில், பிராகு செஸ் தொடர் நடக்கிறது. உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனை திவ்யா, சாலஞ்சர் பிரிவில் பங்கேற்கிறார். ஏழாவது சுற்றில் திவ்யா, டென்மார்க்கின் ஜோனசை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, 33 நகர்த்தலில் ‘டிரா’ செய்தார். இவர் 3.5 புள்ளியுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடத்தில் செக் குடியரசின் பைனக் (5.0), ஸ்பெயினின் டேனில் (4.0), செக் குடியரசன் நேமக் (4.0) உள்ளனர்.

குகேஷ் ஆறுதல்

மாஸ்டர்ஸ் பிரிவில், ‘நடப்பு உலக சாம்பியன்’ இந்தியாவின் குகேஷ், ‘நடப்பு சாம்பியன்’ இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர். முதல் ஆறு சுற்றில் 3ல் தோற்ற குகேஷ், ஏழாவது சுற்றில் ஈரானின் பர்ஹாம் மோதினர். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 49 நகர்த்தலில் ‘டிரா’ செய்தார். அரவிந்த் சிதம்பரம், உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் மோதிய மற்றொரு போட்டி, 47 நகர்த்தலில் ‘டிரா’ ஆனது.

ஏழு சுற்று முடிவில் நெதர்லாந்தின் ஜோர்டன் (5.0 புள்ளி), உஸ்பெகிஸ்தானின் அப்துசட்டோரோவ் (4.5), செக் குடியரசின் டேவிட் நவரா (4.5) ‘டாப்-3’ இடத்தில் உள்ளனர். அரவிந்த 7 (3.0), குகேஷ் (2.0) கடைசி இடத்தில் (10) உள்ளனர்.

Source link