சேலம் ஓமலூரில் மாயமான 4 அரசுப் பள்ளி மாணவர்கள்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார் – என்ன நடந்தது? – 4 government school students missing in salem omalur rescued by police within 2 hours

சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று காலை வீட்டிலிருந்து காணாமல் போன நான்கு பள்ளி மாணவர்களும் இரண்டு மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ந்து குழந்தைகள் காணாமல் போவது சர்ச்சையான சூழலில் அரசு பள்ளியை சேர்ந்த 4 மாணவர்கள் ஒரே நேரத்தில் மயமானது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த 4 மாணவர்களும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டனர். மாணவர்களைப் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீட்டிலிருந்து காணாமல் போன 4 மாணவர்கள்

ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நான்கு பள்ளி மாணவர்கள் இன்று காலை வீட்டிலிருந்து காணாமல் போனதாக சொல்லபடுகிறது. இதுகுறித்த தகவல் காவல்துறையினருக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து, மாணவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

காணாமல் போன மாணவர்கள்

ராஜா (12): வீராமி என்பவரின் மகன். கட்டுவளவு, பள்ளிக்காடு, ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர். கௌசிக் (14): ஜெயபிரபு என்பவரின் மகன். செம்மாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். ஸ்ரீதர் (15): பெருமாள் என்பவரின் மகன். ஏனத்தி காலனியைச் சேர்ந்தவர். ஹரிஷ் (13): அறிவழகன் என்பவரின் மகன். மொட்டூர், செம்மாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்.நான்கு மாணவர்களும் பட்டியலின (ஆதிதிராவிடர்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என சொல்லப்டுகிறது.

தீவிர தேடுதல் நடவடிக்கையில் இறங்கிய போலீசார்

மாணவர்கள் காணாமல் போனது குறித்து மாலையில் தகவல் கிடைத்ததும், ஓமலூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாகத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மாணவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிவதற்காக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசாரணை நடத்தப்பட்டது.

அண்டை மாவட்டக் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் மாணவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

குமாரபாளையத்தில் பத்திரமாக மீட்பு

காவல்துறையினரின் உடனடி நடவடிக்கையைத் தொடர்ந்து, காணாமல் போன நான்கு மாணவர்களும் இரண்டு மணி நேரத்திற்குள் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டனர்.
மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களைப் பாதுகாப்பாக ஓமலூருக்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேலம் அரசு பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள்? தமிழ்நாடு அரசுக்கு எழும் கேள்விகள்!

காணாமல் போனதாகக் கூறப்பட்ட நான்கு பள்ளி மாணவர்களும் குறுகிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, அவர்களது குடும்பத்தினருக்கு நிம்மதியை அளித்துள்ளது. இருப்பினும், மாணவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டதற்கான காரணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் குறித்து இந்தத் தகவலில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை.

Source link