சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கு ரூ.14,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கு ரூ.14,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ பாக்கியராஜை லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் விஏஓ பாக்யராஜ். இவர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக அருகில் உள்ள குஞ்சாண்டியூர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் இளங்கோவன் என்பவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத இளங்கோவன் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய 14 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பாக்கியராஜிடம் இளங்கோவன் வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனுப்புங்கள் வாசகர்களே!

லஞ்சப் பேர் வழிகளை அம்பலப்படுத்த, ‘லஞ்சம் – என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் ‘தினமலர்’ இதழில் வெளியாகும். இப்பகுதிக்கு தகவல் தெரிவிக்கும் வாசகர் பெயர், பிற விவரங்கள் வெளியாகாது. ரகசியம் காக்கப்படும். ‘எனது பெயரை வெளியிடலாம்’ என, துணிச்சலாகச் சொல்லும் வாசகரின் விவரம் மட்டும் வெளியாகும்.

மறக்காமல் அதையும் கடிதத்திலேயே குறிப்பிடுங்கள். e-mail:cb********@*******ar.In, 95666 97267 என்ற நம்பரில் வாட்ஸ்அப், அரட்டை செயலிகள் வழியாக வாசகர்கள் தகவல் அனுப்பலாம். தபாலில் அனுப்ப… ‘லஞ்சம் என்னிடம் பறித்தனர் பகுதி’, ‘தினமலர், டி.வி.ஆர்.ஹவுஸ், சுந்தராபுரம், கோவை.

Source link