ராஜஸ்தானில், வர்த்தக எரிவாயு பற்றாக்குறையால் ஜவுளி, பளிங்குக் கற்கள் மற்றும் ரசாயனத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் வேலைகளை இழந்து சொந்த ஊர் திரும்ப வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. மும்பையில், ஒரு சிலிண்டருக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். மேலும், கள்ளச்சந்தை விற்பனை காரணமாக அதன் விலை இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
குஜராத்தின் சூரத் நகரில், கடுமையான எரிவாயு பற்றாக்குறை காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பெருமளவில் வெளியேறுவதற்கு வழிவகுத்துள்ளது. சமைப்பதே கடினமாகிவிட்ட நிலையில், நகரில் தங்குவதில் அர்த்தமில்லை என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
