ஜனநாயகத்திற்கு விரோதமான அரசியலை, பிரதமரே தலைமை தாங்கி நடத்துகிறார். எனவே தான், இந்த தேர்தல் சாதாரணமாக வந்து

ஜனநாயகத்திற்கு விரோதமான அரசியலை, பிரதமரே தலைமை தாங்கி நடத்துகிறார். எனவே தான், இந்த தேர்தல் சாதாரணமாக வந்து போகிற தேர்தல் அல்ல. பா.ஜ.,வின் அரசியல் வளையத்திற்குள் தேர்தல் ஆணையம் அடங்கி விட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்யும்போது, அவரது வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்துகின்றனர். ஆனால், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் வாகனங்களை சோதனை செய்வதில்லை.
தேர்தல் பிரசாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரம் தாழ்ந்து பேசுகிறார். தமிழகத்தின் சித்ரகுப்தனாக அவர் மாறி விட்டார். அமைச்சர் துரைமுருகன் நடையைப் பற்றி, அவர் தரம் தாழ்ந்து பேசக்கூடாது. அரசியல் கட்சியினரின் குடும்பத்தினர் பற்றி அவதுாறாக பேசக்கூடாது. தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் அப்பாவி பனையேறும் தொழிலாளி மீது கள் இறக்கியதாக, போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது.
– வீரபாண்டியன் மாநில செயலர், இ.கம்யூ.,

Source link