ஜனநாயகன் கடைசி படம்; ஏன் இந்த முடிவு?

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்து வருபவர் விஜய். தற்போது, இவர் அரசியலில் தடம் பதித்துள்ளதால் சினிமாவிற்கு முழுக்கு போட்டுள்ளார். அதனால், இனி வரும் காலங்களில், இவர் சினிமாவில் நடிக்கமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இவரது நடிப்பில் உருவாகியுள்ள, இன்னும் வெளியிடப்படாமல் உள்ள ஜனநாயகன் படம் தான், அவரது கடைசிப்படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலகினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சினிமாவின் உச்ச நடிகராக இருந்துவந்த ஒருவர், திடீரென்று இப்படி ஒரு முடிவெடுத்தது அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், விஜயின் இந்த முடிவிற்கான காரணம் இப்போது வெளியாகியுள்ளது. பிரபல நடிகரும், விஜய்யின் நண்பருமான ஷாம் இந்த காரணம் குறித்துத் தெரிவித்துள்ளார். அதில், ” ஜனநாயகன் தான் கடைசி படம் என அறிவித்தது ஏன்? என விஜயிடம் கேட்டேன். ஒரு விஷயத்தைச் செய்வதென்று முடிவெடுத்துவிட்டால், முழு கவனமும் அதில் தான் இருக்க வேண்டும். அப்போது தான் அதில் சாதிக்க முடியும் என்று விஜய் கூறினார்”  எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஜனநாயகன் எப்போது ரிலீஸ் ஆனாலும் மிகப் பெரிய திரைப்படமாக அமையும். இந்த படம் தமிழ் சினிமாவில் புது வரலாற்றைப் படைக்கும்” எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, விஜய்யின் இந்த தீர்க்கமான முடிவு என்பது, ஒரு நல்ல முடிவாகவே பார்க்கப்படுகிறது. ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டால் அதில் தான் முழு கவனமும் இருக்க வேண்டும். அப்போது தான் நம்மால் அதில் வெற்றி பெற முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்நிலையில், சாதிக்க வேண்டும் என்று  முழு நம்பிக்கையுடன் களத்தில் இறங்கியுள்ள விஜய் வெற்றிபெற வாழ்த்துக்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

Source link