ஜனநாயகன் ட்விட்டர் விமர்சனம்: விஜய்யின் ஒன்மேன் ஷோ, டைட்டில் கார்டு செம சம்பவம், பக்கா மாஸ் – cm joseph vijay starrer jananayagan twitter review and rating

முதல்வர் விஜய், நடிகர் விஜய்யாக இருந்தபோது நடித்த கடைசி படமான ஜனநாயகன் இன்று திரைக்கு வந்திருக்கிறது. சென்சார் போர்டிடம் இருந்து ஏ சான்றிதழ் கிடைத்ததால் குட்டீஸ்கள் யாரும் தியேட்டர்களுக்கு வரவில்லை. ஆனால் விஜய்ணாவை கடைசியாக பார்க்க அவரின் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசிக்கும் விஜய் ரசிகர்கள் அது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்கள் கூறியிருப்பதாவது, முதல் பாதி தீயாக இருக்கிறது. பக்கா கமர்ஷியல் பொழுதுபோக்கு படம். எங்களுக்காக மாஸ் காட்சிகள் வைத்திருக்கிறார் ஹெச்.வினோத். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய் என்கிற டைட்டில் கார்டு அருமை.
பகவந்த் கேசரி பட ரீமேக்னாலும் விஜய்ணா ஸ்டைலில் ஆக்ஷன் காட்சிகள் அதிரடியாக உள்ளது. இது தளபதி விஜய்யின் ஒன் மேன் ஷோ. அனிருத்தின் பிஜிஎம் தெறிக்கிறது. தளபதி அறிமுக காட்சி ரொம்ப பிடித்திருக்கிறது.
யாரும் எதிர்பார்க்காத சர்பிரைஸ் காட்சி வைத்திருக்கிறார் ஹெச். வினோத். ரொம்ப நன்றி இயக்குநரே. கடைசியாக அண்ணனை பார்த்து சந்தோஷப்படுகிறோம். ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டது மாதிரி நிறைவாக இருக்கிறது ஜனநாயகன். விஜய்ணாவை போலீஸ் உடையில் பார்ப்பதே தனி ஸ்டைல் தான். மாஸ் காட்டியிருக்கிறார் முதல்வர். உங்களை படங்களில் ரொம்பவே மிஸ் பண்ணுவோம் அண்ணா. சட்டசபைக்குள் விஜய் வருவதை பார்த்த அவரின் ரசிகர்கள் யாரும் தியேட்டரில் இருக்கையில் இல்லை. எழுந்து கை தட்டி, விசில் அடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்திருக்கிறார்கள்.

ஜனநாயகன் படம் ஆன்லைனில் லீக்கானபோது அதை ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்துவிட்டார்கள். இருந்தாலும் விஜய்ணாவின் கடைசி படத்தை தியேட்டரில் பார்த்து வசூல் கொடுக்காமல் விட மாட்டோம் என்கிற முடிவோடு கொண்டாடுகிறார்கள் தளபதியனஸ். அதனால் ஜனநாயகன் படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டத்திற்கு குறைவே இல்லாமல் இருக்கிறது.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் சில ரசிகர்கள் தியேட்டர் வாசலில் கட்அவுட்டை பார்த்து எமோஷனல் ஆகி அழ ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் சிலரோ தியேட்டரில் அழுதிருக்கிறார்கள். அழுதவர்களை சக ரசிகர்கள் ஆறுதல் சொல்லி தேற்றியிருக்கிறார்கள். இது தான் கடைசி FDFS என நினைத்து பார்க்கவே இல்லை என உருக்கமாக தெரிவித்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.
முதல்வர் விஜய் தமிழக சட்டசபையில் ஒரு ஆக்ஷன் செய்து காட்டியதை தான் டைட்டில் கார்டில் பயன்படுத்தியிருக்கிறார்கள். சட்டசபை சம்பவத்தை பெரிய திரையில் பார்த்ததும் விஜய் ரசிகர்கள் விசில் அடித்து தியேட்டர்களை அதிர வைத்துவிட்டார்கள்.
ஆன்லைனில் வந்த போதிலும் தியேட்டரில் போய் படம் பார்க்கவும் என ஹெச். வினோத் கேட்டுக் கொண்டது வீண் போகவில்லை. கர்நாடகா, கேரளாவில் தான் ஜனநாயகன் அதிகாலை காட்சி துவங்கியது. விஜய்க்காக அவரின் ரசிகர்கள் கனத்த இதயத்துடன் கடைசியாக ஒரு முறை வந்ததை பார்க்க முடிந்தது.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

குடும்பங்களாக வர முடியாமல் போனது தான் பலருக்கும் வருத்தம். விஜய் மாமா படத்தை நாங்கள் தியேட்டரில் பார்க்க முடியாதா என அம்மா, அப்பாவிடம் கேட்கும் குட்டீஸ்களுக்கு பதில் சொல்வது கஷ்டமாக இருப்பதாக தளபதியன்ஸ் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source link